விரைவில் சஜித்தின் மேடையில் ஏற இருக்கும் சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தில் மேடையில் ஏற இருப்பதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி மிக விரைவில் அவர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மேடையில் ஏற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது லண்டலில் உள்ள அவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலமையை கருத்திற் கொண்டு விரைவில் நாடு திரும்ப உள்ளார்.
முன்னதாக சுதந்திர கட்சியை மீட்பதற்காக 94 இல் போன்று நான் வருவேன் என்று அறிக்கை ஒன்றையும் வௌியிட்டிருந்தார் சந்திரிகா.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து கொண்டமைக்கு அவர் கடும் எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றமை கூறத்தக்கது.

Post a Comment