வாரியபொல அக்காவை நினைவிருக்கா? பஸ் நிலையத்தில் கன்னத்தில் அறைந்த இளைஞனுடனே திருமணம்?
வாரியபொல அக்கா என்ற திலின அமல்கா என்ற யுவதி வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ கடந்த 2014ம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞரான சந்திரகுமார (செல்வா) என்ற நபரின் கன்னத்தில் அறைந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில் குறித்த இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
எனினும் இது பொய்யான தகவல் என்றும் இதனை பிரபலத்திற்காக சிலர் செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

Post a Comment