பிக்பாஸ் சீசன் 3; வின்னர் முகேன்; ஆல் ரவுண்டர் தரஷன்; ஏனையவர்களுக்கு கிடைத்த விருதுகள் விபரம்
பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் யாருக்கு என்ன விருது, எவ்வளவு பரிசுத்தொகை என்ற மொத்த விவரமும் தற்போது வெளியாகி உள்ளது.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகம் சர்ச்சையானது, போட்டி என்று பயப்படாமல் சண்டை போட்டது. மிகவும் தைரியமாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
:
பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் யாருக்கு என்ன விருது, எவ்வளவு பரிசுத்தொகை என்ற மொத்த விவரமும் தற்போது வெளியாகி உள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மொத்தமாக நடந்து முடிந்துள்ளது.
107 நாட்கள் பயணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்து இன்று விருதுகள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய வரவேற்பை பெற்றது.
சீசன் 3 தற்போது மிகவும் பெரிய அளவில் வரவேற்பை பெற்று, டிஆர்பியும் எகிறி உள்ளது.மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட பலரும் தமிழகம் முழுக்க பிரபலமாகி உள்ளனர்.
விழாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் இந்த விருதை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது. இவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறியது போட்டியை மொத்தமாக மாற்றியது. அதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த நண்பர் (best buddy) விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யாருடனும் இவர் பெரிதாக சண்டை போடவில்லை. எல்லோருடனும் நட்பாக இருந்தார் என்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிகம் சர்ச்சையானது, போட்டி என்று பயப்படாமல் சண்டை போட்டது. மிகவும் தைரியமாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது. இவர் நிகழ்ச்சியில் மிகவும் ஒழுக்கமாக இருந்தார். வீட்டில் பொறுப்புடன் இருந்தார் என்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தர்ஷனுக்கு இதில் ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இவருக்கு ராஜ்கமல் நிறுவனம் பெஸ்ட் டேலண்டர் விருதும் வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை லஸ்லியா பெற்றுள்ளார். இவர் இரண்டாவது ரன்னர் அப் விருதை வேற்று சாதனை படைத்து இருக்கிறார். வாக்குகள் வித்தியாசத்தின் அடிப்படையில் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
ரன்னர் அப் விருது சாண்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் சிறப்பாக விளையாடினார். மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பதற்காக இவருக்கு ரன்னர் அப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போட்டியில் வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற போட்டியாளர்களை விட இவர் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Post a Comment