விசேட தேவையுடைய குழந்தையுடன் காட்டில் மரங்களில் வாழும் தந்தையின் சோகக் கதை
விசேட தேவையுடைய குழந்தையை பாராமரிக்க
உதவியின்றி காட்டிலுள்ள மரங்களில் வாழும் தந்தையொருவரின் கதை அநுராதபுரம் –
ஹொரவ்பொத்தானை பகுதியில் பதிவாகியுள்ளது.
ஹொரவப்பத்தானை புளியங்கடவல பகுதியில்
அடையாளம் தெரியாத ஒருவர் குழந்தையொன்றை காட்டில் மறைத்து வைத்திருப்பதாக
ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலையத்திற்கு தகவலொன்று கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, குறித்த
பகுதிக்கு பொலிஸ் குழுவொன்று விரைந்ததாக ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி டி.ஜீ.எஸ்.ஆர்.சஞ்ஜீவ எமது செய்திப் பிரிவிற்கு
உறுதிப்படுத்தினார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.
பாரிய காடொன்றுக்கு மத்தியில் காணப்படுகின்ற விளை நிலமொன்றில் தனித்து நின்றுக் கொண்டிருந்த ஒரு மரம்.
இந்த மரத்தின் மீதேறுவதற்கு ஒரு ஏணிப்படி.
ஏணிப்படி நிறைவுறும் மரத்தின் உச்சிப் பகுதியில் சிறு குடிசை வீடொன்று.
அந்த குடிசை வீட்டில் நபர் ஒருவரும், ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தையும் இருப்பதை பொலிஸார் அவமானித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸார் இந்த நபரிடம் விசாரணைகளை நடத்த ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட விசாரணைகளில் பல்வேறு
உண்மை தகவல்களை அறிந்த தாம், மிகுந்த கவலைக்குள்ளானதாக பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி குறிப்பிடுகின்றார்.
ஹொரவ்பொத்தானை – புளியங்கடவல பகுதியைச்
சேர்ந்த விஜயசிங்கவின் மனைவி, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்
மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மனைவி உயிரிழப்பதற்கு முன்னர் இருவரும் நாளாந்த கூலித் தொழிலை செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு விசேட தேவையுடைய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
ஐந்து வயதான நேத்மி கவிந்தியா என்ற இந்த சிறுமிக்கு இரண்டு கால்களும் பிறப்பிலேயே ஊகமுற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
கூலித் தொழிலை செய்யும் குறித்த நபர், தனது குழந்தையை தனியே வீட்டில் விட்டு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார்.
விளை நிலங்களை இரவு நேரங்களில் பாதுகாக்கும் தொழிலை கொண்ட இவருக்கு, வீட்டு வசதிகள் கூட கிடையாத நிலைமை காணப்படுகின்றது.
இந்த நிலையில், விளை நிலங்களை இரவு
நேரத்தில் பாதுகாக்கும் தொழிலை செய்யும் வகையில், மரங்களில் குடிசைகளை
கட்டி அதில் குழந்தையையும் அழைத்து சென்று வாழ்ந்து வந்துள்ளார்
குழந்தையின் தந்தையான விஜயசிங்க.
குறித்த நபரின் ஏழ்மை நிலைமையை
புரிந்துக்கொண்ட ஹொரவ்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அவருக்கான
அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி ட்ரூ சிலோன்






Post a Comment