Header Ads

அறிமுகத்திலேயே சூப்பர் ஸ்டார் மகனுடன் காதல்


தமிழில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக அறிமுகமாக உள்ள பிரபல வாரிசு நடிகை ஒருவர், அதற்குள் காதல் கிசுகிசுவில் சிக்கி விட்டார்.

பெரும் எதிர்பார்ப்போடு தமிழில் அறிமுகமாகிறார் இயக்குநர் ப்ரியதர்ஷன் - லிசி தம்பதியினரின் மகளான கல்யாணி ப்ரியதர்ஷன்.

இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தவிர சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அப்படம் டிராப் ஆகிவிட்டது.

தமிழ் தவிர சில மலையாளப் படங்களிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல நட்சத்திர ஜோடியின் மகள் என்பதால், அவரது படங்கள் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு உள்ளனர். தமிழில் இன்னமும் ஒரு படம் கூட ரிலீசாகாவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர் வட்டம் இப்போதே உருவாகி விட்டது.

தமிழில் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறார் கல்யாணி.

ஆனால், எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கும் வகையில் திடீரென காதல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் கல்யாணி. அவரது காதல் விஷயம் பற்றி புதிய கிசுகிசு ஒன்று பரவி வருகிறது.

அதாவது, முன்பொரு பேட்டியில், 'நான் யாரை காதலிக்கிறேன் என்று குடும்பத்தினருக்கு தெரியும்' எனக் கூறியிருந்தார் கல்யாணி.

அதை வைத்து அவர் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோஹன்லாலின் மகன் பிரணவ் மோகன்லாலைத் தான் காதலிக்கிறார் என பலரும் பேசி வருகின்றனர். 

அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Powered by Blogger.