அருவக்காலு குப்பை பிரச்சினை; புத்தளம் நகர சபை விடுத்துள்ள அறிவித்தல்
கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை
புத்தளம் அருவக்காலு குப்பை சேகரிக்கும் பிரிவில் கொட்டுவது தொடர்பாக
நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க புத்தளம் நகர சபை நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
புத்தளம்
நகர சபை எல்லைக்கூடாக வன்னாத்தவில்லு அருவக்காலு குப்பை சேகரிக்கும்
பிரிவுக்கு குப்பைகளை எடுத்துச் செல்வதனால் மக்கள் சுற்றாடல், சுகாதார
மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து
வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த
நிலையில், மக்கள் எதிர்நோக்கும் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக
நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு புத்தளம் நகர சபை நடவடிக்கை
எடுத்துள்ளதுடன், மக்களிடமிருந்தும் எழுத்து மூலமான முறைப்பாடுகளையும்
ஏற்பதற்கு புத்தளம் நகர சபைக்கு தயாராக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
இது தொடர்பான உங்களது முறைப்பாடுகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு
(15.10.2019) முன்னதாக, நகர சபை பிரதான அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும்
புத்தளம் நகர சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புத்தளம் நிருபர் ரஸ்மின்

Post a Comment