மஹிந்தவை சந்தித்துள்ள ராஜிதவின் மனைவி விடுத்துள்ள கோரிக்கை
சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனைவி சுஜாதா சேனாரத்ன எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து, தனது கணவனை பொதுஜன பெரமுனவுடன் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவே இந்தக் கோரிக்கையை மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ள போதிலும் அதற்கு கட்சியின் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரமேதாச தோல்வியடைவார் என்று எதிர்பார்த்துள்ள அமைச்சர் ராஜித கட்சி தாவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment