கூட்டமைப்பு மீண்டும் பிரிவினையை தோற்றுவிக்கிறதா? அஸ்கிரிய பீட தேரர் எதிர்ப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் மீண்டும் ஒரு பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க மேற்கொள்ளப்படும் தூண்டுதலா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் உப தேரர் வெனருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
எனவே கூட்டமைப்பு முன்வைத்துள்ள எந்தவித யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டு வருவதாக குளியாபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

Post a Comment