Header Ads

மஹிந்த தரப்பு முன்னாள் அமைச்சருக்கு சஜித்தின் அமைச்சரவையில் முக்கிய பதவி



சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதன் பின்னர் அமைக்கப்படுகின்ற அமைச்சரவையில் தனக்கு முக்கிய அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

மேர்வின் சில்வா தனக்கு நெருக்கமான ஒரு நபரிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒனறு செய்தி வௌியிட்டுள்ளது.

அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியும் தனக்கு கிடைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு தான் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதாகவும் அதில் வெற்றி பெற்றபின்னர் தனக்கு முக்கிய அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மேர்வின் சில்வா கலந்து கொண்டிருந்தமை கூறத்தக்கது.

Powered by Blogger.