Header Ads

இரண்டு அமைச்சர்கள் சஜீத்துடன் இரகசிய ஒப்பந்தம்




அமைச்சர் ரவுப் ஹக்கீமையும், றிசாட் பதியுதினையும் நம்பி முஸ்லிம் மக்கள் ஏமாற வேண்டாம். அவர்கள் சொந்த நலனுக்காக சஜித்துடன் இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளனர்.

மக்களுக்காக எதையும் செய்யவில்லை. எனவே கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி பங்காளராகுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கல்முனை, மாளிகைக்காடு, காரைதீவு போன்ற பகுதிகளில் பல்வேறு தேர்தல் பிரசார கூட்டங்களில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினால் கிழக்கில் முஸ்லிம் பிரதேச அபிவிருத்திகளை நிறுத்தி விடுவார் என்ற பொய்யான கட்டுக்கதைகளை எதிரணியினர் பரப்பி வருகின்றனர்.

அது முழுப்பொய். கோத்தபாய ஜனாதிபதியானதும் நானே முன்னின்று கிழக்கில் இன,மத,பேதமின்றி அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

ஹக்கீமும், றிசாட்டும் இணைந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கி முஸ்லிம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் பொருளாதார பிரச்சினைகள் அதிகமுள்ளன. 

2015க்கு பின்னர் கிழக்கில் சகல அபிவிருத்திகளும் நிறுத்தப்பட்டுள்ளன. எனது தந்தையார் மஹிந்த கட்டிய ஒலுவில் துறைமுகம் இன்று சீரழிந்து போயுள்ளன. கல்வித்தரமும் இங்கு குறைந்துள்ளன.

தொழில் பிரச்சினை நிறையவுள்ளன. ஹக்கீமும், றிசாட்டும் ஜ.தே.கட்சியில் தங்கியுள்ளனர். அவர்களால் தனித்து ஒன்றுமே செய்ய முடியாது.
Powered by Blogger.