Header Ads

சஜித் பிரேமதாசவின் மனைவியிடம் அமைச்சர் ஹர்ஷ கூறியுள்ள விடயம்


ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஒரு சோடி சப்பாத்தை வாங்கி கொடுக்க முடியாதா என்று அவரின் மனைவியிடம் தான் கூறியதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.


அவர் எப்பொழுதுமே வெள்ளை நிற சேட், வெள்ளை நிற காற்சட்டையுடன் செருப்பு அணிவதாக கூறிய அவர், சஜித் பிரேமதாச மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் செயற்படுவது இல்லை என்று கூறியுள்ளார்.

அதேநேரம் சிங்கள வாக்குகளின் மூலம் மாத்திரம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவதை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

அதன்படி சிங்களம், தமிழ், முஸ்லிம், பேகர் ஆகிய அனைத்து இன மக்களும் சஜித் பிரேமதாச உடன் இணைந்து இருப்பது இலங்கையர் என்ற வகையிலே என்று அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.