Header Ads

புதுக்குடியிருப்பு தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடுகள்



முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,
சுதந்திரபுரம் கொலனி பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் உரிமையாளரால் ஒருபகுதியில் இருந்து மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட மண்ணில் புதையுண்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இடங்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் உள்ள எலும்பு எச்சங்களை மீட்பதற்கு நாளை 21.10.19 நீதிமன்ற உத்தரவு பெற்று நீதிபதி மற்றும் தடையவியல் பொலிசார் இணைந்து குறித்த மனித எச்சங்களை மீட்கவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Powered by Blogger.