இராணுவத் தளபதியின் செய்தியை அவரது அனுமதியின்றி பயன்படுத்தியுள்ள கோட்டா
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் விளம்பரத்திற்கு தற்போதைய இராணுவத் தளபதியின் செய்தி அவரது அனுமதி இன்றியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய இதனைக் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை அவர் ஊடகங்களுக்கு வௌியிட்டார்.
அண்மையிகைாட்டாபய ராஜபக்ஷவின் பத்திரிகை விளம்பரங்களில் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் செய்தி உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், அது சட்ட விரோதமானது என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய முன்னதாக கூறியிருந்தார்.


Post a Comment