Header Ads

கோட்டா வெற்றி பெற்றாலும் எதிர் நோக்கியுள்ள சிக்கல்; பசில் வழங்கியுள்ள ஆலோசனை



ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அமைச்சர் ஹக்கீம் மற்றும் ரிஷாதை பாரியளவில் தாக்கிப் பேச வேண்டாம் என்று பசில் ராஜபக்ஷ பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் என்ற வகையில் விமர்சித்த போதிலும் பயங்கரவாத செய்பாடுகள் தொடர்பில் அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றாலும் நவம்பர் 18ம் திகதியில் இருந்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போராட்டம் ஆரம்பமாகும் என்றும், இதன்போது தீர்மானமிக்க பங்காளர்களாக அமையப் போவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே என்று அவர் கூறியுள்ளார்.

அதனால் முஸ்லிம் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை பெற முடியாத நிலையை உருவாக்க வேண்டாம் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட போதிலும் அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான அளவு உறுப்பினர்கள் இல்ழல என்பதகால் முஸ்லிம் உறுப்பினர்கள் 12 பேரின் ஒததுழைப்பும் அவசியமாகிறது என்று அவர் கூறியுள்ளார்.

ஆகவே விமசிப்பது பரவாயில்லை என்றும் எனினும் பாரியளவில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை சுமத்தி விமர்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Powered by Blogger.