Header Ads

மைத்திரிக்காக விட்டுக் கொடுப்பவருக்கு கிடைத்த பரிசு




எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்காக தேசியப் பட்டியல் உறுப்பினர் டிலான் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ய இணக்கம் வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வௌியிட்டுள்ளது.

அதற்குப் பதிலாக தனக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவியை வழங்குமாறு அவர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஊவா மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் மைத்திரி குணரத்னவை அந்தப் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.