எஸ்.பி வாயை மூடிக்கொண்டு இருந்தால் அதுவே பெரிய உதவி - விமல்
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும்வரை எஸ்.பி திஸாநாயக்க வாயை மூடி இருந்தால் அதுவே அவர் செய்யும் பெரிய உதவியாக அமையும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் ஆதரவு கோட்டாபய ராஜபக்சவுக்கு என்பது உட்பட எஸ் பி திசாநாயக்க வெளியிட்டு வரும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே விமல் விமல் வீரவன்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
"அவருடைய கருத்துக்கள் தொடர்பில் சொல்லி வேலையில்லை. அவர் தேர்தல் முடியும் வரை வாயை மூடி இருந்தாலே போதும் அதுதான் அவர் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்." இவ்வாறு விமல் வீரவன்ச உரையாற்றியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் கலைஞர்களுடன் ஆன உடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே விமல் வீரவன்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

Post a Comment