Header Ads

முன்னாள் பிரதமர் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள வேண்டுகோள்



ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் முகங்கொடுத்துள்ள வன்முறைகள் தொடர்பில் தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கலந்துரையாடியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அது தடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தாக அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் இடம்பெறும் காலத்தில் மாத்திரமன்றி தேர்தலின் பின்னரும் பொதுமக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Powered by Blogger.