அடம் பிடிக்கும் ரணிலால் தனி வழியில் செல்ல தீர்மானித்துள்ள சஜித் குழு
தற்போது கட்சித்தலைமையை எவருக்கும் வழங்கும் எண்ணம் இல்லை என பிரதமர் ரணில் தனக்கு நெருக்கமானவர்களிடம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
கட்சித்தலைமை பொறுப்பு சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டுமென அவரது அணி கடும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில் அவர் தலைவர் பதவியை தற்போதைக்கு விட்டுச்செல்ல ஆயத்தமாக இல்லை என கூறப்பட்டது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் சஜித் ரனில் அணி இடையே கடும் வாய் தர்க்கம் இடம்பெற்றிருந்தது.
இதற்கிடையே சஜித் பிரேமதாச - சம்பிக ரனவக ஆகியோர் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய கூட்டணி ஒன்றை அமைக்க சஜித் அணி உறுப்பினர்கள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்.
கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி சம்பிகவை கட்சியில் இணைத்துக்கொண்டு அவருக்கு பிரதித்தலைவர் பதவியை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பௌத்த சிங்கள வாக்குகளை கவரும் வேலைத்திட்டத்திற்கு சம்பிகவை முன்னால் கொண்டுவர யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment