பதவி விலகுகிறாரா அநுரகுமார திசாநாயக்க?
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சிங்கள உடகங்கள் சில செய்தி வௌியிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர் பதவி விலக உள்ளதை கட்சியின் அரசியல் சபைக்கு அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது அரசியல் சபைக் கூட்டத்தில் பெரும் சூடான வாக்குவாதங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்காக செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தையும் கட்சிக்கு மீளப் பெற முடியாமல் அரசுடமையாக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

Post a Comment