Header Ads

இனிமேல் கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் அறவிட திட்டம்



கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களையும் வகைப்படுத்தி அவற்றுக்கு கட்டணம் அறிவிடும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு நகருக்கு, நெரிசல் மிக்க நகரங்களில் இருந்து சொகுசு பயணிகள் பஸ் சேவையை ஆரம்பித்ததன் பின்னர் இந்த திட்டத்தை அமுல்படுத்த உள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

கொழும்பு நகரத்தில் ஏற்படுகின்ற அதிக வாகன நெரிசல் மற்றும் காற்று மாசடைவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.


இந்த வாகன நெரிசல் காரணமாக நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான எருபொருள் விரயமாவதாக அவர் மேலும் கூறினார்.

நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் அறிவிடும் திட்டம் தவிர மேலும் யோசனைகள் சிலவும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
Powered by Blogger.