Header Ads

மஹிந்த - சந்திரிகா மோதல் மீண்டும் ஆரம்பமாகிறதா?



எதிர்வரும் ஆண்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து களமிறங்கவுள்ளன.




அந்த கூட்டமைப்புக்கு கதிரைச் சின்னத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு காரணம், அந்த சின்னத்தின் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காணப்படுகின்றார்.

அந்தக் கட்சியின் செயலாளராக இருந்த முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன அண்மையில் உயிரிழந்தார்.



இந்நிலையில் செயலாளர் பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படாமையால், அந்த முன்னணியின் தீர்மானங்கள் மத்திய செயற்குழுவினாலே எடுக்கப்பட வேண்டும்.

மத்திய செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Powered by Blogger.