நாட்டுக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிறு ஏற்றுமதி பயிர்கள் சிலவற்றை இறக்குமதி செய்ய நிதி அமைச்சு தடை விதித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மிளகு, பாக்கு, கிராம்பு, கறுவா, புளி, சாதிக்காய் உள்ளிட்ட சிறு ஏற்றுமதி பயிர்களை இறக்குமதி செய்ய உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறு ஏற்றுமதி பயிர் விவசாயிகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களைப் பாதுகாத்தல், ஊக்குவித்தல் மற்றும் விவசாய உற்பத்தியாளர்களுக்கு அனுகூலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment