Header Ads

71 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் - 181,126 மாணவர்கள் பல்கலைக்கழத்துக்கு தகுதி

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.


அதன்படி 181,126 மாணவர்கள் பல்கலைக்கழத்துக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 71 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறியுள்ளது.

பெறுபேறு மீள் பரிசீலனைக்கான இறுதி நாளாக அடுத்த மாதம் 17ம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இம்முறை ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற்றது.

நாடு தழுவிய ரீதியில் 2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் 337,704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் இம்முறை தோற்றினர்.
Powered by Blogger.