Header Ads

ஜனாதிபதி கோட்டாபயவை கொலை செய்ய திட்டமிட்ட ஹக்கீமுக்கு நெருக்கமான UNP பா.உ



ஜனாதிபதியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் குறித்து கட்டுநாயக்க பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட கட்டுநாயக்க பொலிஸார் சீதுவை அமன்தொலுவ பிரதேசத்தில் வசித்த ஐவரை அண்மையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 26 வயதான ஹக்கீம் மொஹமட் ரிப்கான் என்பரே இந்த கொலைக்கு திட்டம் தீட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.

சந்தேகநபர் வாழைச்சேனை பகுதியில் வசிப்பவர் எனவும் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த கொலை முயற்சி தொடர்பாக ஏனைய இளைஞர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த 4 இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது அவரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பிட்டன நபர்  விசாரணை செய்யப்படும் போது தான் ஐக்கிய தேசியக் கட்சி அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு  நெருக்கமானவர் எனவும் கைதாகும் போது அவர் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியிலும் அழைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைதாகும் போது இவரிடம்  11 சிம் கார்டுகளும் இவரால் இயக்கபட்ட  4 ஃபேஸ்புக் அக்கவுண்ட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன .

மேலும் இவர் இரண்டு வருடம் சவுதி அரேபியாவில் இருந்து நாட்டுக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபருக்கு இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை செய்யப்படுகிறது.

முஹம்மது ரிஸ்வான் எனப்படும் நபர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் தற்போதும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவரை மூன்று மாதங்கள் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது

கட்டுநாயக்க பொலிஸாரால் குறித்த சந்தேகநபர் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.