பௌத்த தேரர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
ஹுங்கம பிரதேசத்தில் பொலிஸ் வீதித் தடுப்பில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்வீதியில் பயணித்த வேன் ஒன்றில் இருந்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதன் போது நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்த பௌத்த துறவி மீது குண்டு தாக்கியமையினால் பிக்கு உயிரிழந்துள்ளார்.

Post a Comment