Header Ads

காதலியை கழட்டிவிட்டாரா தர்ஷன் - ஷனம் ஷெட்டி பொலிஸில் முறைப்பாடு

பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட தர்ஷன், நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக ஷனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன்.

விளம்பர மாடலான தர்ஷன் மாடல் அழகியான ஷனம் ஷெட்டியை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தர்ஷன் மீது போலீசில் ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியில் அந்த டைட்டில் முகேன் ராவுக்கு கிடைத்தது. இதனால், தர்ஷன் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

தர்ஷனுக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும், கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக்பாஸ் நிறைவு விழாவிலேயே கமல்ஹாசன் அந்த அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்னும் அந்த படம் துவங்கவில்லை. அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

பிக்பாஸ் இல்லத்தில் தர்ஷனுடன் நடிகை ஷெரின் ரொம்பவும் நெருங்கி பழகினார். தர்ஷன் - ஷெரின் இருவருக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது என பிக்பாஸ் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால், தனக்கு ஒரு காதலி இருப்பதாக தர்ஷன் அறிவித்த நிலையில், அவரது காதலி குறித்த தகவல்களை திரட்ட பலரும் ஆர்வம் அடைந்தனர்.

தர்ஷனின் காதலி ஷனம் ஷெட்டி தான் என்ற தகவல் வைரலாக பரவிய நிலையில், தொடர்ந்து ஷனம் ஷெட்டி தொடர்பான செய்திகள் வெளியாகி வந்தன. இதனால், கடும் அப்செட் ஆன ஷனம் ஷெட்டி, தன்னால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்று முடிவெடுத்து, தங்களின் காதல் பிரேக் அப் ஆனதாக அறிவித்தார்.

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் மஹா படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்து வருகிறார். பிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலியான ஷனம் ஷெட்டியும் இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். அண்மையில், சிம்புவுடன் ஷனம் ஷெட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், தற்போது தர்ஷன் மீது காவல் நிலையத்தில் ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். அதில், தனக்கும் தர்ஷனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. ஆனால், தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ள தர்ஷன் மறுப்பதாக ஷனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார். தர்ஷனுக்கும் - ஷனம் ஷெட்டிக்கும் இடையே என்ன பிரச்சனை என நெட்டிசன்கள் இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
Powered by Blogger.