சஜித்துக்கு முன்கதவால் கொடுத்து பின்கதவால் பறிக்கும் ரணில்
பிரதமர் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் தலைவர் ஆகிய பதவிகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ஐக்கிய தேசிய கட்சி மத்திய செயற்குழு தீர்மானித்துள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சில அதிகாரங்களை செயற்படுத்த பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டணியின் செயலாளர் பதவியை பரிந்துரை செய்யும் அதிகாரம் சஜித்துக்கு வழங்கப்பட்டுள்ள அதேவேளை அதற்கான அனுமதியை கட்சி செயற்குழு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் வேட்பு மனு குழு தலைவராக சஜித் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் வேட்பு மனுவை மத்திய குழு இறுதிசெய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சஜித்துக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அதனை செயற்படுத்த மத்திய குழு அனுமதி கிடைக்க வேண்டும் என கண்டிஷன் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment