திடீரென மயங்கி விழுந்த 15 மாணவர்கள் வைத்தியசாலையில்
பதுளை - கந்தகெட்டி - கந்தகெபுவுல்பென வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முற்பகல் திடீரென சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் நீண்ட நாட்களாக மூடப்பட்டு காணப்பட்ட வகுப்பறை ஒன்றை திறந்து சுத்தம் செய்ய முயற்சித்த வேளையிலேயே மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயக்கமடைந்தமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Post a Comment