Header Ads

தாய்லாந்தில் திடீரென பொது மக்களை சுட்டு வீழ்த்திய இராணுவ வீரர்

தாய்லாந்து நாட்டில் ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியானது.


தாய்லாந்து நாட்டின் வடகிழக்கே பாங்காக் நகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நாகோன் ராட்சசிமா பகுதி அமைந்துள்ளது.

இங்குள்ள வணிக வளாகம் முன்பு இன்று கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ராணுவ வீரர் ஒருவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் 12 பேர் பலியாகி உள்ளனர் என்றும், நகரின் பல்வேறு பகுதிகளில் இதுபோல் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Powered by Blogger.