ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் அமெரிக்கா செல்ல தடை? அஸ்கிரிய பீட தேரர்
இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்காவால் பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான செயல் என்று அஸ்கிரி பீட மகா சங்க தேரர் மெதகம தம்மானந்த தேரர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கையில் கையொப்பமிட செய்வதற்கே இந்த தடை விதிக்கப்பட்டிருப்பதாக தேரர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகளுக்கும் இதே போன்று தடை விதிக்கப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிங்க இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.

Post a Comment