Header Ads

தற்கொலை செய்ய தாயிடமே தூக்கு கயிறு கேட்ட சிறுவனுக்கு கிடைத்த முதல் வெற்றி

அவுஸ்திரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்கு உள்ளான குவாடன் பெல்ஸின் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வளைத்தளங்களில் பரவலானதை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதராவாக குரல் எழுப்பட்டது.


வளர்ச்சியின்மை காரணமாக அவர் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தனக்கு வாழ்வதற்கே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொள்ள தூக்குகயிறு தரும்படியும் தாயிடம்  கேட்டு மன்றாடும் வீடியோ வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை உலுக்கியது.

அதனை தொடர்ந்து சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் தனது அனுதாபத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவின்  ஆல்-ஸ்டார் ரக்பி அணியில் துன்பத்துக்குள்ளான சிறுவனை வரவேற்க்கும் முகமாக அவரை மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குயின்ஸ்லாந்தின் ராபினாவில் உள்ள சிபஸ் சூப்பர் ரக்பி மைதானித்திற்கு நடுவில் குவாடன் பெல்ஸ் உற்சாகமாக அணியின் வீரரான தோம்சனுடன் கைகோர்த்து மைதானத்தற்குள் உள்நுழைந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் அவரை பெரும் சந்தோசத்துடன் வரவேற்றமை எல்லோர் மணதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் , குவாடன் பெல்ஸின் முகத்தில் பிரகாசமான புன்னைக தெரிந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முந்தைய செய்தியை படிக்க - தற்கொலை செய்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிஅழும் சிறுவன் - நெஞ்சை உருக்கும் சம்பவம்
Powered by Blogger.