Header Ads

ஊரடங்கு சட்டத்தின் போது வௌ்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்ட 17 பேர் கைது

நாட்டில் ஊரடங்கு சட்டம் முல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹொரவப்பொத்தான - கியூளக்கொடயில் உள்ள பள்ளிவாசலில் வௌ்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்திய பள்ளிவாசலின் தலைவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரதேசத்திலுள்ள குறித்து பள்ளியில் இன்றைய தினம் சுமார் 70 பேர் வரையில் தொழுகையில் ஈடுபட்டு உள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பொலிசார் முற்றுகையிடுகிறார்கள் என அறிந்ததும், தாம் அணிந்துவந்த பாதணிகளையும் கைவிட்டு அங்கிருந்து 50 க்கும் மேற்பட்டவர்கள் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து பள்ளியின் தலைவர் உட்பட பள்ளியில் இருந்த சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தப்பிச்சென்று 50 பேர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Powered by Blogger.