கொரோனா தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவிப்பு
கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் நோய், 'தனிமைப்படுத்தற்குரிய நோய்' என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த விடயத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புக் கட்டளைச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்க சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, பயன்படுத்தி தீர்க்கப்பட வேண்டிய மூன்று அடுக்குள்ள கொண்ட மருத்துவ முகக்கவசங்களையும். என்-95 வகை முகக்கவசங்களையும் இங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கும் அல்லது மீள் ஏற்றுமதி செய்தற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின்கீழ், சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment