Header Ads

கொழும்பு ஆனந்த கல்லூரி மாணவனுக்கு கொரோனாவா? கல்லூரியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபரின் (சுற்றுலா வழிகாட்டியாக தொழில் செய்தவர்) மகனுக்கு கொரோனா  வைரஸ் தொற்று  இல்லை என்று அரசு தகவல் துறை இன்று அறிவித்துள்ளது.

அவரின்  மகனின் உடல்நிலை குறித்து இணையத்தில்  பரவும் தவறான தகவல்கள், அவர் படிக்கும் ஆனந்த கல்லூரியில் சலசலப்பை  ஏற்படுத்தியிருந்தன.

12 ஆம் வகுப்பு மாணவரான அவருடன் கொரோனா வைரசால் பாதிக்கபட்ட அவரின் தந்தை மிகவும்  குறைந்தபட்ச தொடர்பையே  கொண்டிருந்தார் என சுகாதார அதிகாரிகளின் கூற்று தெரிவிக்கின்றது.

அவரது மகன் இந்த நேரத்தில் கொரோனா வைரஸுக்கு negative ஆக  இருக்கிறார் . மேலும்  அவர் பாதிக்கப்படுவார் என்பது மிகவும் சாத்தியமில்லை, ஆனால் முன்னெச்சரிக்கைகளுக்காக அவர் தற்போது ஐ.டி.எச். இல் தங்க வைக்கபட்டு அவதானிக்கப்படுகிறார்.

இந்த சம்பவம் குறித்து அப்பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பீதியடைய வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Powered by Blogger.