Header Ads

மனைவிக்கு கொரோனா - கனடா பிரதமர் எடுத்துள்ள முடிவு

 மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்

தனது மனைவி சோபி பிரிட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலையை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்.

அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Powered by Blogger.