Header Ads

கொழும்பில் பெண் ஒருவரை நிர்வாணமாக ஓட ஓட தாக்கும் வீடியோ காட்சி - தாக்கியது பொலிஸாரா?

இந்த சம்பவம் நேற்று நடைபெற்றிருப்பதாக அறியக்கிடைத்துள்ளதுடன், இதை வீடியோ செய்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இது  குறித்து தேடிப்பார்க்கையில் தெரியவந்ததாவது இது தொடலங்க 75வது தோட்டத்திற்குள் நடைபெற்ற சம்பவமாகும். இங்கு 50ற்கும் அதிகமான நபர்களால் நிர்வாணமான பெண் சுற்றிவளைக்கப்பட்டிருந்ததுடன், சில நபர்கள் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டு அவரை துன்புறுத்துகிறார்கள்.

"உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாத பெண்ணை, கட்டைகளை கையில் ஏந்தியவண்ணம் ஐந்து ஆண்கள் சுற்றிவளைத்துக்கொண்டு இருந்தனர். ஒருவர் முடியை பிடித்த வண்ணம்... இன்னுமொருவர் கட்டையால் தாக்குகிறார்..." என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்த முதற்கட்ட விசாரணையில், அந்த பகுதி கிராண்ட்பாஸ் பொலிஸ் பகுதிக்கு சொந்தமானது என்றாலும், இவ்வாறு தோட்டத்திற்குள் குதித்த " சட்டம் மற்றும் ஒழுங்கை  அமல்படுத்தியது" துறைமுக பொலிஸாரினால் ஆகும். அவர்கள் சிவில் உடையில் இது போன்று புறநகர் சேரிப்பகுதிகளுக்கு குதித்து இவ்வாறு நடந்துக்கொள்வது சாதாரண விடயம் என குறிப்பிடப்படுகிறது.

துறைமுக பொலிஸாரிடம் இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையின் போது, அதன் OIC " இல்லை இல்லை அது இங்கு சொந்தமானது அல்ல. நான் நினைக்கிறன் தவறான செய்தி " என குறிப்பிட்டுள்ளார்.

" அதாவது துறைமுக பொலிஸார் இங்கு குறிப்பிடும் பகுதிக்கு சோதனை செய்ய இவ்வாறு செல்வதில்லையா? என நாங்கள் கேட்டோம்.

அதற்கு "துறைமுக பொலிஸில் எதனாலும் இங்கு குறிப்பிடும் பகுதிக்கு ரோந்து செல்கிறது. இருப்பினும் இதுபோன்ற எந்த சம்பவமும் எங்களிடம் பதிவாகவில்லை. பதிவாகினால் கூறுகிறோம் !"

தகவல் - லங்கா நியூஸ் வெப்

Powered by Blogger.