Header Ads

கொரோனா... போலி தகவல்களை பரப்பினார்களா ராஜிதவும் பொன்சேகாவும்?


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியவர்களால் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புக்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொதுமக்கள் பீதி அடையும் வகையில் அவர்கள் அறிவிப்புகளை மேற்கொண்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபரால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

போலியான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றத்தின் கீழ் இதன்போது சட்டநடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.