Header Ads

​பொது மக்களிடம் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தடுத்து மக்கள் வாழ்க்கையை பாதுகாப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து மக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதூரமான சுகாதார பிரச்சினையை வெற்றிகொள்வதற்காக பொது இடங்களில் நடமாடும் போது சமூக இடைவெளியை பேண வேண்டும்.

அத்துடன் வைத்திய நிபுணர்களினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் கடந்த சில நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் அன்றாட தேவைகளை கொள்வனவு செய்வதற்காக சந்தைகளுக்கு செல்வார்கள்.

பொருட்களை கொள்வனவு செய்வது அவசியம் என்ற போதும் வைரஸ் தொற்றுக்கு ஆட்படுவதை தவிர்ப்பதற்காக சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
Powered by Blogger.