Header Ads

கொரோனா தாக்கத்துக்கு ஆளான முதலாவது இலங்கை நபர் செய்துள்ள நல்ல காரியம்

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பிய முதல் இலங்கைப் பிரஜை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் செயற்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இன்று கொழும்பு களுபோவில மருத்துவமனைக்கு சென்ற அவர் இரத்த தானம் செயதிருப்பதாக கஹத்துடுவ பொதுசுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் தனுக பத்மராஜ தெரிவித்தார்.

அவரது இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அந்த இரத்தத்தை கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்ற கொரோனா நோயாளர்கள் இருவருக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பொதுசுகாதார வைத்திய அதிகாரி கூறினார்.
Powered by Blogger.