Header Ads

கொரோனாவால் அநுராதபுரம் சிறைச்சாலையில் பதற்ற நிலை; பொலிஸ், STF பாதுகாப்பில்

Update
அநுராதபுரம் சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

அனுராதபுர சிறைச்சாலைக்கு கொண்டு
செல்லப்பட்ட சிலருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கைதிகள் மத்தியில் வதந்தி பரப்பட்டதையடுத்து சிலர் தப்பியோட முயற்சி எடுத்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விசேட அதிரடிப்படை அங்கு விரைந்து தப்பியோடிய கைதிகளை மடக்கிப் பிடித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

தடைகளையும் மீறி தப்பியோடிய கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இதனை அனுராதபுரம் வைத்தியசாலையின் பணிப்பாளர் ரவீந்திர உறுதிப்படுத்தினார்.

-----------------------------------------------------------------------


அனுராதபுர சிறைச்சாலையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளமையினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர முயற்சியில் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதையடுத்து அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டது.

அங்குள்ள ஏனைய கைதிகள் தமக்கு பாதுகாப்பு இல்லையென சிறைக்கூடங்களை தகர்த்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி சுமார் 900 கைதிகள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வானத்தை நோக்கி அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அங்கு ஏற்பட்ட வன்முறை சம்பவத்தினால் பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Powered by Blogger.