நேற்று இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு - 03 பேர் காயம்
மொரட்டுவை – எகொடஉயன பகுதியில் காவற்துறை கட்டளையை மீறி பயணித்த சிற்றூர்ந்து மீது நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்ட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மொரட்டுவை நோக்கி குறித்த சிற்றூர்ந்து பயணித்துள்ளது.
இந்த நிலையில் மொரட்டுவை நகரில் உள்ள வீதித்தடையில் வாகனத்தை நிறுத்துமாறு பாதுகாப்பு தரப்பினரால் சமிக்ஞை செய்யப்பட்டுள்ளது.
எனினும், காவற்துறை கட்டளையை மீறி பயணித்த குறித்த வாகனம் எகொடஉயன பகுதிக்கு அருகில் உள்ள வீதித்தடையிலும் நிறுத்தாமல் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் எகொட உயன புதிய பாலத்திற்கு அருகில் உள்ள வீதித்தடையில் சிற்றூர்ந்தை நிறுத்துமாறு சமிக்ஞை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த சிற்றூர்ந்து காவற்துறையினர் இருந்த திசையை நோக்கி பயணித்துள்ளதுடன், அவர்களை மோதி செல்வதற்கு முயற்சித்ததாகவும் இதன்போது காவற்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த சிற்றூர்ந்தில் பயணித்த 4 பேரில் 3 பேர் காயமடைந்துள்ளனiர்.
சம்பவம் தொடர்பில் சிற்றூர்ந்தின் சாரதி உட்பட காயமடைமந்த 3 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் காவல்துறை பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த இளைஞர்கள் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியைச்சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment