Header Ads

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த நபரின் உடல் எரிக்கப்பட்டது

கொரோனா தொற்றுக்கு இலக்காகி நேற்று (01) உயிரிழந்த மருதானை போபஸ் லேன் பிரதேசத்தைச் சேர்ந்த நபரின் உடல் எரிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந் நபரின் உடலை தகனம் செய்யாமல் அடக்கம் செய்வதற்கு முஸ்லிம் தரப்புகளால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன.

உயிரிழந்தவரின் உடல் சற்றுமுன் கொட்டிகாவத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். .

முன்னதாக இன்று காலை மருதானையை சேர்ந்த அவரின் குடும்ப உறவினர்களுக்கு உடல் காண்பிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் உடலைஅடக்கம் செய்வதற்கு தீவிர முயற்சிகளை எடுத்தபோதும் மருத்துவ காரணங்களை காட்டி அதற்கு இணக்கம் தெரிவிக்கப்படவில்லை.
Powered by Blogger.