Header Ads

கொரோனா தொடர்பில் சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸின் பரவல் தொடர்பில் சீனாவின் வுஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று புதியதொரு விடயத்தினை கண்டறிந்துள்ளது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த விடயங்கள் கண்டறியப்பட்டள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட நோயாளியை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் 6 அடிக்குள்ளேயே வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்தது.

இதன்போது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர் பயன்படுத்திய கணினிகள், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பிற சாதனங்களில் குறித்த வைரஸினை அவதானிக்க முடிவதாகவும் குறித்த ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.
Powered by Blogger.