பேருவளையில் கர்ப்பிணித் தாய் ஒருவர் பற்றி பரவும் போலியான செய்தியும் உண்மை நிலையும்
பேருவளை பன்னில பிரதேசத்தை சேர்ந்த கொரோனா வைரஸ் தொற்றிய தாய் இன்று காலை களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையுடன் கொழும்பு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வௌியாகியுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கர்ப்பிணித் தாய் போலி முகவரியைக் கொடுத்து தனக்கு கொரோனா தொற்று இருப்பதை மறைத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது என்று தெரிய வந்துள்ளது.
குறித்த கர்ப்பிணிப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவரின் தாய் உடன் சென்றுள்ளதுடன், அவர் அவருடைய விலாசத்தை பொறுப்பாளர் என்ற வகையில் வழங்கியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்ணின் தாய் பேருவளையில் வேறு பிரதேசத்தில் வசித்து வந்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் குறித்த கர்ப்பிணித்தாய் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பிரதேச சுகாதார அதிகாரிகளால் கொரோனா தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தியே பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த கர்ப்பிணித்தாய்க்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது மர்மமாக இருப்பதாகவும் குடும்ப உறுப்பினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா இருப்பதை மறைத்து, போலி முகவரியை வழங்கி உண்மைகளை மறைத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக போலியான செய்தி பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment