Header Ads

ஊரடங்கு நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஆவா குழு - சுற்றிவளைத்த பொலிஸார்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் “ஆவா”  என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் மூவர், இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மல்லாகம், சேர்ச் லேனில் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ள இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படும் வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது நண்பர்களால் மல்லாகத்தில் உள்ள வீடொன்றில்  நடத்தப்பட்டது.

அது தொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை, இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். அதன்போதே  3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், ஊரடங்கு வேளையில் பொலிஸ் அனுமதியின்றி சட்டத்துக்குப் புறம்பாக கூட்டம் சேர்த்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், சந்தேநபர்களை, நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.  
Powered by Blogger.