Header Ads

சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

கோவிட் 19 வைரஸ் தொடர்பாக சந்தேகப்படும் நோய் அறிகுறிகள் இருப்பின் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 1390 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதற்கேற்ப, வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்கு 1990 அம்புலன்ஸ் சேவையையும் பெற்றுக்கொள்ளலாம் என்று டாக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

இந்த நாட்களில் இருமல், தடுமல், சுவாசக் கோளாறு இருப்பின் ஒரே தடவையில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம்.

1390இன் ஊடாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மருத்துவ ஆலோசனைகளை வழங்க மருத்துவர்கள் 24 மணிநேரமும் தயாராக இருக்கின்றனர்.

Powered by Blogger.