Header Ads

ஹிரு தொலைக்காட்சியின் முக்கிய இரண்டு பேர் சுவர்ணவாகினிக்கு தாவினர்

ஹிரு தொலைக்காட்சியின் பிரதான தொகுப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களான சுதேவ ஹெட்டியாராச்சி மற்றும் ரங்கன டி சில்வா ஆகியோர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சுதேவ ஹெட்டியாராச்சி ஹிரு தொலைக்காட்சியில் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில் அவருடன் இணைந்து ரங்கனவும் விலகல் கடிதத்தை ஆசியா ஊடக வலையமைப்புத் தலைவரிடம் கையளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுதேவ சுவர்ணவாஹினி தொலைக்காட்சி இயங்கிவருகின்ற ஈ.ஏ.பி நிறுவனத்தின் குழும முகாமையாளராகவும், தொலைக்காட்சி முகாமையாளராக ரங்கனவும் நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதேவ ஹெட்டியாராச்சி ஹிரு ஊடகத்துடன் 1998ஆம் ஆண்டில் இணைந்துகொண்டிருந்ததோடு தொடர்ந்து 22 வருடங்களக அந்நிறுவனத்தில் தொழில்புரிந்துவந்துள்ளார்.

ஏற்கனவே மகாராஜா ஊடக வலையமைப்பின் முக்கிய ​பொறுப்பில் இருந்த ஜெ. ஶ்ரீரங்காவும் சுவர்ணவாகினிக்கு தாவியுள்ளமை கூறத்தக்கது.

No comments

Powered by Blogger.