உங்கள் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம்
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தினை கொரோனா வைரஸ் தாக்கம் நிறைவடையும் வரையில் நீடிப்பதற்கு மோட்டார் வாகன திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் மகிந்த அமரவீரவினால் மோட்டார் வாகன திணைக்களத்திற்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு பின்னர் நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலத்தினை ஏப்ரல் 15 ஆம் திகதி வரை மோட்டார் வாகன திணைக்களம் நீடிப்பதற்கு தீர்மானித்திருந்தது.
அந்த காலமும் நிறைவடைந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கம் நிறைவடையும் வரையில் குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான செல்லுபடியாகும் காலத்தினை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment