WHO வுக்கு எதிரான அமெரிக்காவின் அதிரடியும் ஐநா சபையின் பதிலடியும்
கொரோனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டதாக குற்றம்சாட்டி வரும் டிரம்ப், அந்த அமைப்பிற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளார்.
இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த அமைப்பின் தாமதமான செயல்கள் உலக நாடுகளுக்கு பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறினார்.
அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு பல மில்லியன் டாலர்கள் (கடந்த ஆண்டு 400 மில்லியன் டாலர்கள்) நிதி பெறும் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வைரஸ் விவகாரத்தில் உண்மையை மறைத்ததால் அந்த அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில், வெள்ளைமாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் தவறான நிர்வகிப்பு மற்றும் வைரஸ் குறித்த தகவல்களை உலக நாடுகளுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்தது தொடர்பாக விரிவான மதிப்பீடு செய்ய தனது நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட வேறு பல அமைப்புக்களும் கடுமையாக போராடி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் என்டோனியோ குட்ரேஸ் தெரிவித்துள்ளார்.
எனவே இது போன்ற தருணங்களில் குறித்த அமைப்புக்களுக்கு வழங்கும் நிதியை குறைப்பது என்பது சரியான முடிவாக இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment