Header Ads

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தி

பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ள்ள இக்கால கட்டத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களை பொறுப்புடன் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை மாத்திமே கொள்வனவு செய்யுமாறும், தேவையற்ற பயணங்களை தற்போது தவிர்த்துக்கொள்றுமாறும் அரசாங்கம் பொதுமக்களிடம் வேணடுகோள் விடுத்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பொருட்களையும் வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்தவொரு நோக்கத்திற்காகவும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதி்பதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.